இஸ்ரேல் சட்டவிரோதமாக பாலஸ்தீன நிலத்தைக் கைப்பற்றியது:ஐ.நா. சர்வதேச நீதி மன்றம்
2024-07-20 18:47:45

இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் உரிமை நிலத்தைக் கைப்பற்றுவது சர்வதேச சட்டத்தை மீறியது என்றும், பாலஸ்தீன நிலத்தில் சட்டவிரோதமாக கைப்பற்றும் நடவடிக்கையை இஸ்ரேல் வெகுவிரைவில் முடிக்குமாறும் வலியுறுத்துவதாகவும் ஐ.நா.சர்வதேச நீதி மன்றம் 19ஆம் நாள் தெரிவித்தது. இதற்கு, எகிப்து மற்றும் அரபு லீக், வரவேற்பு தெரிவித்தன. அரபு லீக் தலைமை செயலாளர் கேட் கூறுகையில், சர்வதேச நீதி மன்றத்தின் இந்த கருத்து, பாலஸ்தீனம் தொடர்புடைய பிரச்சினையில் குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுக்கு முக்கிய சட்ட அடிப்படை ஆதாரம் வழங்குகின்றது என்று தெரிவித்தார்.