சீனாவுடனான கூட்டுறவு மற்றும் ஒத்துழைப்பை நிலைநிறுத்த சாலமன் தீவுகளின் தலைமை அமைச்சர் விருப்பம்
2024-07-20 18:17:39

2019ஆம் ஆண்டு, சீனாவுக்கும் சாலமன் தீவுகளுக்கும் இடையே தூதாண்மை உறவு தொடங்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில், இரு தரப்புறவு விரைவாக வளர்ந்து வந்துள்ளது. நடைமுறை நிலைமைகளுக்கு ஏற்ப அதிக சாதனைகள் பெறப்பட்டுள்ளன.

2024ஆம் ஆண்டு மே அந்நாட்டின் தலைமை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெரேமியா மானேலே,  ஜுலை திங்களில் சீனாவில் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் ஒன்றுக்கொன்று மரியாதை அளித்து, கூட்டு வளர்ச்சியை நனவாக்கும் விதம் விரிவான நெடுநோக்குக் கூட்டுறவை உருவாக்க ஒப்புக்கொண்டன.

இது குறித்து ஜெரேமியா மானேலே சி.எம்.ஜி ஊடகத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில்

நாங்கள் சரியான முடிவு எடுத்து, வரலாற்றின் சரியான பக்கத்தில் நிற்பதாக நான் நினைக்கிறேன். 2019ஆம் ஆண்டுக்கு, சாலமன் தீவுகள் மற்றும் சீனா இடையே பல வளர்ச்சி ஒத்துழைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த  5 ஆண்டுகளில் சீனாவின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இந்த கூட்டாளியுறவு மற்றும் ஒத்துழைப்புறவை நிலைநிறுத்துவதை மிகவும் எதிர்பார்க்கிறோம் என்று சுட்டிக்காட்டினார்.

சீனாவில் நிகழ்ந்த மாற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து பேசுகையில்,

சீனாவின் வளர்ச்சி முன்னேற்றம் மற்றும் அனுபவங்கள், குறிப்பாக, வறுப்பு ஒழிப்புத் துறையில் சில நடவடிக்கைகள் நாங்கள் கற்றுக்கொள்ளத் தக்கவை என்றும் மானேலே கூறினார்.