மைக்ரோசாப்ட்: உலகளவில் சுமார் 85லட்சம் கணினிகளுக்கு பாதிப்பு
2024-07-21 17:22:02

கணினிப் பாதுகாப்புச் சேவை வழங்கி வரும் அமெரிக்க நிறுவனமான கிரவுட்ஸ்டிரைக், மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயக்க அமைப்பில் பாதுகாப்பு மென்பொருளைப் புதுப்பித்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் மென்பொருளில் இயங்கும் கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் நீல திரை தோன்றி இயல்பான  இயக்கத்தை நிறுத்தியது. அதன் விளைவாக, உலக நாடுகளில் விமானப் போக்குவரத்து, மருத்துவம், ஊடகம், நிதி,  சில்லறை விற்பனை, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட பல தொழிற்துறைகள் பாதிக்கப்பட்டன. அமெரிக்காவில் மட்டும், சுமார்  23ஆயிரம் விமானச் சேவைகள் ஒத்தி வைக்கப்பட்டன.

மைக்ரோசாப்ட் நிறுவனம் 20ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக,  உலகளவில் கிட்டத்தட்ட 85 லட்சம் கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இந்த சிக்கலைத் தீர்க்கும் வகையில், கிரவுட்ஸ்டிரைக் நிறுவனம் தீர்வு கண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.