கம்போடியாவில் சாலைக்கு ஷிச்சின்பிங் சூட்டல்
2024-07-21 16:54:39

இவ்வாண்டின் ஜுலை 19ஆம் நாள், சீனாவுக்கும் கம்போடியாவுக்கும் இடையே தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 66ஆம் ஆண்டு நிறைவாகும். இதை முன்னிட்டு, கம்போடியாவின் தலைநகர் புனோமில், ஒரு சாலைக்கு ஷிச்சின்பிங் பெயர் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நாட்டு தலைமையமைச்சரின் சிறப்புப் பிரதிநிதியும் துணைத் தலைமையமைச்சருமான சன் சாந்தோல்(Sun Chanthol), கம்போடியாவுக்கான சீனத் தூதர் வாங் வென்பின் ஆகியோர் இந்நிகழ்ச்சில் பங்கெடுத்தனர்.

இச்சாலை, புனோமில் உள்ள மூன்றாவது சுற்றுவட்டச் சாலையின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இதன் நீளம் மொத்தம் சுமார் 48 கிலோமீட்டர்.