சீனா:எஸ்.சி.ஓ அமைப்பின் தலைமைப் பொறுப்புடன் பணிகளைத் தொடங்கி வைத்துள்ளது
2024-07-22 19:00:40

அஸ்தானாவில் சமீபத்தில் நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு பிறகு, 2024 முதல் 2025 வரையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கம் போல, 2025ஆம் ஆண்டு உச்சி மாநாடு நடத்தப்படும். இந்தப் பணியில் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும் சீனா, தலைமைப் பொறுப்புடன் பணிகளைத் தொடங்கி வைத்துள்ளது. வரும் ஓராண்டுக்காலத்தில், அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம், பண்பாடு மற்றும் மக்கள் தொடர்பு ஆகிய துறைகளிலான ஒத்துழைப்பை பலப்படுத்த சீனா உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் 22ஆம் நாள் தெரிவித்தார்.

தொடக்க காலத்தில் 6 உறுப்பு நாடுகள் அடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, தற்போது 26 நாடுகள் கொண்ட பெரிய குடும்பமாக விரிவாகியுள்ளது. உலகில் மிக அதிக நிலப்பரப்பளவு மற்றும் மக்கள் தொகை கொண்ட பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பாக அது மாறியுள்ளது. இந்நிலையில், புதிய ரக சர்வதேச உறவை கட்டியெழுப்புவதில் சிறந்த முன்மாதிரியாக உருவாகியுள்ளது என்றும் மாவ் நிங் குறிப்பிட்டார்.