நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி
2024-07-22 11:20:37

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஜூலை 26ஆம் நாள் துவங்க உள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி அமைப்புக் குழுவின் முதல் செய்தியாளர் கூட்டம் 21ஆம் நாள் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முக்கிய செய்தி மையத்தில் நடைபெற்றது. பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. பாரிஸ் உலகத்தை வரவேற்க தயாராக உள்ளது என்று இக்குழுவின் தலைவர் டோனி எஸ்டாங்குவேட் தெரிவித்தார்.

இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முக்கிய சிறப்புகளில் ஒன்று சீன் ஆற்றில் நடைபெறவுள்ள தொடக்க விழா. தொடக்க விழா நாளில் 45 ஆயிரம் பாதுகாப்புப் பணியாளர்கள் கடமையில் இருக்க ஏற்பாடு செய்ய பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது என்று எஸ்டாங்குவேட் கூறினார்.