2024 அரசுத் தலைவர் தேர்தலில் இருந்து விலகல்: பைடன் அறிவிப்பு
2024-07-22 10:11:25

2024ஆம் ஆண்டுக்கான அரசுத் தலைவர் தேர்தலில் இருந்து விலகுவதாக அமெரிக்க அரசுத் தலைவர் ஜான் பைடன் ஜூலை 21ஆம் நாள் அறிவித்தார். தனது இம்முடிவு குறித்து வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கு விளக்கிக் கூறுவேன் என்றும் அவர் கூறினார்.

இதனையடுத்து, அமெரிக்கத் துணை அரசுத் தலைவர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அரசுத் தலைவர் வேட்பாளராகுவதற்கு முழு மூச்சுடன் ஆதரவு மற்றும் அங்கீகாரம் அளிப்பதாகவும் பைடன் தெரிவித்தார். தான் வேட்பாளரான பரிந்துரையை வென்று குடியரசுக் கட்சின் அரசுத் தலைவர் வேட்பாளரான டிராம்பைத் தோற்கடிக்க இயன்ற அளவில் முயற்சி செய்வேன் என்று ஹாரிஸ் இதற்குப் பின்பு தெரிவித்தார்.

டிராம்ப் மீதான கொலைத் தாக்குதல் மற்றும் பைடன் பொது தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்ததையடுத்து, அமெரிக்க பொது மக்கள் இவ்விரு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் அமெரிக்கா எதிர்கொள்கின்ற பிரிவினை நிலைமையின் மீது மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பைடன் விலகியதற்குப் பின்பு, ஜனநாயக கட்சியின் உள்புறத்தில் காணப்படும் குழப்பமான நிலைமை இன்னும் தொடரக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.