சீனப் பாணி நவீனமயமாக்கலின் திறவுக் கோல்
2024-07-22 14:46:44

ஜூலை 15முதல் 18ஆம் நாள் வரை நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வில் சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்குவது மற்றும் சீனப் பாணி நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவது பற்றிய தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில் சீனாவின் புதிய சுற்று சீர்திருத்தத்தின் இலக்கு மற்றும் முக்கிய அம்சங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அத்துடன், உலக வர்த்தக பாதுகாப்புவாதம் கடுமையாக நிலவியுள்ளது. உலகப் பொருளாதார மீட்சி இன்னும் மந்தமாக உள்ளது.

அண்மையில், உலகப் பொருளாதாரம் மந்தமாக இருந்த அதே வேளையில், சர்வதேச நாணய நிதியம் சீனப் பொருளாதார வளர்ச்சி பற்றிய முன் மதிப்பீட்டை 5.0விழுக்காடாக உயர்த்தியுள்ளது. அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி பற்றிய முன் மதிப்பீட்டைக் குறைத்துள்ளது.

சொந்த வளர்ச்சிப் பாதையில் ஊன்றி நின்று வளர்ச்சியின் சாதனைகளிலிருந்து ஒவ்வொருவரும் நன்மை பெறச் செய்ய சீனா  பாடுபடும். இது தான் சீனப் பாணி நவீனமயமாக்கலின் திறவுக் கோலாகும்.