யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழுவின் 46வது கூட்டத்தொடர் தில்லியில் துவக்கம்
2024-07-22 10:14:11

யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 46வது கூட்டத்தொடர் ஜூலை 21ஆம் நாள் இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் துவங்கியது. அதன் துவக்க விழாவில் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி கலந்து கொண்டார்.

நடப்பு கூட்டத்தொடர் ஜூலை 21முதல் 31ஆம் நாள் நடக்கவுள்ளது. உலக பாரம்பரிய மரபு செல்வங்கள்  பட்டியலில் சேர்க்கும் 27 பரிந்துரைகளைப் பரிசீலனை செய்வதும் தற்போதைய பட்டியலிலுள்ள 124 மரபு செல்வங்களின் பாதுகாப்பு நிலைமையை மதிப்பீடு செய்வதும் இதன் முக்கிய அம்சமாகும்.