ரென் அய் ஜியாவோ நிலைமையைக் கட்டுப்படுத்துவது குறித்த தற்காலிக ஏற்பாடு
2024-07-22 10:21:11

ரென் அய் ஜியாவோ நிலைமையைக் கட்டுப்படுத்துவது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ரென் அய் ஜியாவோ நான்ஷா தீவுகளில் ஒரு பகுதியாகும். ரென் அய் ஜியாவோ உள்ளிட்ட நான்ஷா தீவுகள் மற்றும் அதன் அருகிலுள்ள கடல் மீது சீனா இறையாண்மையைக் கொண்டுள்ளது.

தற்போதைய ரென் அய் ஜியாவோ நிலைமையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மூன்று கோட்பாடுகளைச் சீனா வெளிப்படையாக அறிவித்துள்ளது. அண்மையில், ரென் அய் ஜியாவோ நிலைமையைக் கட்டுப்படுத்துவது குறித்து சீனா பிலிப்பைன்ஸுடன் தொடர்ந்து கலந்தாய்வு நடத்துகிறது. மனித நேய வாழ்க்கை பொருட்களை நிரப்புவதற்கான தற்காலிக ஏற்பாடுகள் எட்டப்பட்டன. தென் சீனக் கடலின் பதற்ற நிலைமையைத் தணிவுப்படுத்தும் வகையில், கடல்சார் கருத்து வேற்றுமையைக் கூட்டாக கட்டுப்படுத்த இரு நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன என்று இச்செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.