இரு நாடுகள் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்: சீனா வேண்டுகோள்
2024-07-23 09:57:52

ஜூலை 22ஆம் நாள் ஐ.நா.பாதுகாப்பவை யேமன் நிலைமை பற்றி அவசரக் கூட்டத்தை நடத்தியது.

ஐ.நா.வுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூ சோங் கூறுகையில், காசா மோதலின் பாதிப்பு தெளிவாக இருக்கின்றது என்பதை இந்த பதற்ற நிலைமை காட்டுகிறது. இது குறித்து சீனா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. பதற்ற நிலைமை மேலும் தீவிரமாகாமல் தவிர்க்கும் வகையில், தொடர்புடைய தரப்புகளுக்குக் கட்டுப்பாட்டுடன் இருக்குமாறு சீனா வேண்டுகோள் விடுத்தது. மத்திய கிழக்கின் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. மோதல்கள் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன. காசாவில் போர்நிறுத்தம் செயல்படுத்தப்படவில்லை என்பதே இதற்கு அடிப்படைக் காரணம். மத்திய கிழக்கு பிரச்சினை மிகவும் சிக்கலானது மற்றும் உணர்வலை தன்மை வாய்ந்தது. பாலஸ்தீனப் பிரச்சினை முக்கியமானது. "இரு நாடுகள் திட்டத்தை" முழுமையாக செயல்படுத்துவதே அடிப்படை வழியாகும்.

பாலஸ்தீனத்தின் சுதந்திர நாட்டை விரைவில் உருவாக்குவதையும் சீனா ஆதரிக்கிறது. "இரு நாடுகள் திட்டத்தைச் செயல்படுத்துமாறு வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்தார்.