நகர் மற்றும் புறநகர்களில் 69.8 இலட்சம் புதிய வேலை வாய்ப்புகள்
2024-07-23 14:50:14

2024ம் ஆண்டின் முற்பாதியில் சீனாவின் நகர் மற்றும் புறநகர்களில் 69.8 இலட்சம் புதிய வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஜுன் திங்களில் தேசிய நகர் மற்றும் புறநகர்களில் வேலையற்றோர் விகிதம், 5 விழுக்காடு ஆகும் என்று சீன மனித வளம் மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சகத்தின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஜுன் திங்கள் வரை, நாடளவில் முதியோருக்கான அடிப்படை சமூக காப்புறுதி, வேலையின்மை காப்பீடு, வேலையின் போது காயமுற்றதற்கான காப்பீடு ஆகியவற்றைப் பெற்றவர்களின்  எண்ணிக்கை, முறையே 107.1 கோடி, 24.3 கோடி மற்றும் 29.9 கோடியை எட்டி, கடந்த ஆண்டின் முற்பாதியில் இருந்ததைக் காட்டிலும், 1 கோடியே 42.3 இலட்சம், 38.8 இலட்சம் மற்றும் 47.8 இலட்சம் அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் ஜுன் திங்கள் வரை, இந்த மூன்று சமூகக் காப்புறுதி நிதியின் மொத்த வருமானம், 4.1 இலட்சம் கோடி யுவானாகும். மொத்தச் செலவு, 3.6 இலட்சம் கோடி யுவானாகும். ஜுன் திங்கள் இறுதியில் மொத்த மிச்சத் தொகை, 8.8 இலட்சம் கோடி யுவான் ஆகும். இந்த காப்புறுதி நிதி, நிதானமாக இயங்கி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.