லாவோஸில் சீன வெளியுறவு அமைச்சர் பயணம்
2024-07-23 18:04:06

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஜுலை 25 முதல் 27ஆம் நாள் வரை லாவோஸில் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டுத் தலைநகரான வியண்டியனில் நடைபெறும் சீனா மற்றும் ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், ஆசியான் நாடுகள் மற்றும் சீனா, ஜப்பான், தென்கொரியாவின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்,  தெற்காசிய உச்சி மாநாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், ஆசியான் பிராந்திய மன்றத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்கிழமை தெரிவித்தது.