அணு ஆயுதம் இல்லாத நாடுகளின் கவனத்துக்குப் பதில் அளிக்க வேண்டும்: சீனா
2024-07-23 19:32:15

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்துக்கான 11வது பரிசீலனை மாநாட்டுக்கு 2ஆவது ஆயத்தக் கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது. சீனா இக்கூட்டத்துக்கு 4 பணி ஆவணங்களை வழங்கியது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நீங் அம்மையார் 23ஆம் நாள் கூறுகையில்,

அணு ஆயுதங்களைக் கொண்ட நாடுகள், அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளின் கவலைகள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். ஒன்றுக்கொன்று முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமை குறித்து அணு ஆயுதங்களைக் கொண்ட நாடுகள் உடன்படிக்கையை உருவாக்கவும் அல்லது அரசியல் அறிக்கையை வெளியிடவும் வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள், இவற்றில் இந்த ஆவணங்களை, பல்வேறு தரப்புகளின் ஆதரவுடன், கூட்டத்தின் சாதனைகளில் சேர்க்க வேண்டும் என்றும், சர்வதேச பாதுகாப்பு சூழலை மேம்படுத்தவும், நீண்டகால அமைதியுடைய உலகை உருவாக்கவும் இது பங்கு ஆற்றும் என்றும் சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.