© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன அறிவியல் கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பல ஆய்வாளர்களின் கூட்டு முயற்சியுடன், சாங்ஏ-5 விண்கலத்தின் மூலம் நிலவில் இருந்து சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளில், தற்போது தெரியாத ஒரு படிகத்தில் நீர் மற்றும் அம்மோனியம் ஆகியவற்றின் மூலக்கூறுகள் கண்டறியப்பட்டன. சீனவிஞ்ஞானிகள் முதல்முறையாக நிலவின் மண்ணில் இருந்து நீர் மூலக்கூறுகளைக் கண்டுபிடித்துள்ளனர். நீர் மற்றும் அம்மோனியம் நிலவில் இருப்பதற்கான சான்றுகளை இது காட்டுகின்றது.
இந்த ஆய்வு முடிவு இயற்கை-வானியல் எனும் அறிவியல் இதழின் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.