8ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சி துவக்கம்
2024-07-23 15:09:17

8ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சி ஜூலை 23ஆம் நாள் சீன யுன்னான் மாநிலத்தின் குன்மிங் நகரில் துவங்கியது. 6 நாட்கள் நடைபெறும் நடப்புப் பொருட்காட்சியில் 82 நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 2000க்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. அவற்றில் பாதியளவு நிறுவனங்கள் தெற்காசியா மற்றும் தென் கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தன.

ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் கூட்டு வளர்ச்சியை நனவாக்குவது என்பது நடப்பு பொருட்காட்சியின் தலைப்பாகும். சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுடனான பொருளாதார ஒத்துழைப்புகளில், பெரும் உள்ளார்ந்த ஆற்றல் கொண்ட பசுமை எரியாற்றல், நவீன வேளாண்மை, மருத்துவ சிகிச்சை, பண்பாட்டு மற்றும் சுற்றுலா முதலிய தொழில்கள் இதில் பன்முகங்களிலும் வெளிக்காட்டப்படும்.

சீன வணிகத் துறை அமைச்சகத்தின் தரவின்படி, 2023ஆம் ஆண்டு, சீன மற்றும் தெற்காசிய நாடுகளின் வர்த்தக தொகை சுமார் 20ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை நெருங்கியது. முதலாவது சீன-தெற்காசிய பொருட்காட்சி நடைபெற்ற 2013ஆம் ஆண்டில் இருந்ததை விட, இது ஒரு மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.