ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருக்கு லீ ச்சியாங் வாழ்த்து
2024-07-24 09:52:30

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராகத் தொடர்ந்து பதவி ஏற்ற உர்சுலா வான் டெர் லேயன் அம்மையாருக்குச் சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஜூலை 23ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

லீ ச்சியாங் தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவின் வளர்ச்சிக்கும், ஐரோப்பிய ஆணையத்தின் முக்கிய பங்கு மற்றும் செல்வாக்கிற்கும் சீன அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது, சீன-ஐரோப்பிய உறவு சீராக வளர்ச்சி அடைந்து வருகிறது. இரு தரப்புகளின் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு சாதனைகளைப் பெற்றுள்ளன. ஐரோப்பாவுடன் இணைந்து, இரு தரப்புறவின் அரசியல் அடிப்படை மற்றும் ஒன்றுக்கொன்று நெடுநோக்கு நம்பிக்கையை அதிகரித்து, ஒன்றுக்கொன்று ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, உலகளாவிய அறைக்கூவல்களைக் கூட்டாக சமாளித்து, உலக அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பதற்கு மேலும் பெரும் பங்காற்ற சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.