© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமித்ரோ குலேபாவும் ஜுலை 24ஆம் நாள் சீனாவின் குவாங்சோ நகரில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரு நாட்டுறவு குறித்து வாங் யீ கூறுக்கையில்
தொலைநோக்குப் பார்வையில் இரு நாட்டுறவை வகுக்கும் அடிப்படையில் இரு நாட்டுறவு மற்றும் இரு தரப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் இவற்றைப் பின்பற்றி, தொடர்பை நிலைநிறுத்தி, பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தி, மக்களிடையே நட்பை அதிகரித்து, சீன-உக்ரைன் உறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற விரும்புகின்றோம் என்றும் தெரிவித்தார்.
3ஆவது ஆண்டாக உக்ரைன் நெருக்கடி தொடர்கிறது. அதேவேளையில், இந்த நெருக்கடி தீவிரமாகி, வெளியுகத்திற்கு விளைவை ஏற்படுத்தும் இடர்பாடும் உள்ளது. அரசியல் வழிமுறையில் நெருக்கடியைத் தீர்ப்பதை முன்னெடுக்க சீனா எப்போதும் பாடுபட்டு வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குலேபா கூறுகையில்
உக்ரைனும் சீனாவும், நெடுநோக்குக் கூட்டாளிகளாகவும், பொருளாதார வர்த்தகத் துறையில் முக்கிய ஒத்துழைப்புக் கூட்டாளிகளாகவும் திகழ்கின்றன. தைவான் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டை ஆதரித்து வரும் உக்ரைன், ஒரே சீனா கொள்கையை தொடர்ந்து பின்பற்றி வருகிறது. உக்ரைன், சீனாவின் கருத்துக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, அரசியல் மூலம் உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக, சீனா மற்றும் பிரேசில் கூட்டாக வெளியிட்ட 6 அம்ச ஒத்த கருத்துகளை உணர்ப்பூர்வமாக ஆய்வு செய்துள்ளது என்று குறிப்பிட்டார்.