ஃபத்தா பிரதிநிதிக் குழுவின் தலைவர் மஹ்மூத் அலுலுடன் வாங் யீ சந்திப்பு
2024-07-24 14:50:11

பாலஸ்தீனத்தின் பல்வேறு குழுக்கள் பெய்ஜிங் அறிக்கையில் கையொப்பமிடுவதற்கு முன்பு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஃபத்தாவின் துணைத் தலைவரும், பிரதிநிதிக் குழுவின் தலைவருமான மஹ்மூத் அலுலைச் சந்தித்துப் பேசினார்.

வாங் யீ கூறுகையில், பாலஸ்தீன மக்களின் நீதியான லட்சியத்தைச் சீனா எப்போதும் உறுதியாக ஆதரித்து வருகின்றது. காசா மோதல் மாபெரும் மனித நேயப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனம் அம்மக்களுக்கே சொந்தமானது, பாலஸ்தீனத்திற்கு அம்மக்கள் தலைமை தாங்குவது, பாலஸ்தீனத்தில் அம்மக்களால் ஆட்சி புரிவது ஆகியவற்றில் ஊன்றி நின்றால், இந்த வரலாற்று பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்றார்.

சீனா, பாலஸ்தீன மக்களின் உண்மையான நண்பர் மற்றும் சகோதராகும். பல்வேறு உள் குழுக்களின் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் மேம்படுத்துவதற்குச் சீனா ஃபத்தா குழுவுக்குத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து, பாலஸ்தீன பிரச்சினையை முழுமையாக தீர்ப்பதற்கு பங்காற்ற வேண்டும் என்று அலுல் தெரிவித்தார்.