© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
“புதிய யுகத்தில் சீனாவின் ஆழமான சீர்திருத்தத்தால் உலகிற்குக் கிடைக்கும் வாய்ப்புகள்" என்ற தலைப்பில், சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் கூட்டம் ஜுலை 22ம் நாள் தான்சானியாவின் டாரேஸ் சலாம் நகரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென்ஹாய் ஷியொங் இதில் காணொளி மூலம் உரைநிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், சீனப் பாணி நவீனமயமாக்கல் என்பது, சீனா, பன்முகங்களிலும் சீர்திருத்தத்தை மேலும் ஆழமாக்குவதன் தலைப்பாகும். சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் போக்கில் இது இடைவிடாமல் முன்னேறி, பரந்துபட்ட எதிர்காலத்தைத் தரும் என்று தெரிவித்தார்.
சீன ஊடகக் குழுமத்தின் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க பிராந்திய நிகழ்ச்சி மையத்தின் தலைவர் அன் ஷியோ யூ இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கெடுத்த விருந்தினர்களுக்கு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்தியக் கமிட்டியின் 3ஆவது முழு அமர்வுக்கான முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் மைல்கல் முக்கியத்துவத்தை அறிமுகம் செய்தார்.
“புதிய யுகத்தில் சீனாவின் ஆழமான சீர்திருத்தத்தால் உலகிற்குக் கிடைக்கும் வாய்ப்புகள்" என்ற தலைப்பிலான கலந்துரையாடல் கூட்டம், தென்னாப்பிரிக்கா, சாம்பியா, நைஜீரியா, கென்யா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறவுள்ளன.