பாலஸ்தீனத்தின் பல்வேறு பிரிவுகளிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கான சீனாவின் முயற்சிகளுக்கு பாராட்டு – சி.ஜி.டி.என் கருத்துக் கணிப்பு
2024-07-24 21:16:04

பாலஸ்தீனத்தின் பல்வேறு பிரிவுகள், பெய்ஜிங்கில் நடந்த சந்திப்பில் நல்லிணக்க நிலையை அடைந்தன. சி.ஜி.டி.என். தொலைக்காட்சி நிறுவனம் உலகளாவிய இணையப் பயன்பாட்டாளர்களிடையே நடத்திய ஒரு கருத்துக் கணிப்பு ஒன்றில் பாலஸ்தீனர்களின் உரிமைகளை ஆதரிப்பது, பிரிவினையை முடிவுக்கு கொண்டு வருவது, பல்வேறு பிரிவுகளிடையே ஒருங்கிணைந்த நிலையை ஏற்படுத்துவது ஆகியற்றுக்காக சீனாவின் முயற்சிகளை 92.81 விழுக்காட்டினர் வெகுவாக பாராட்டினார். பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் முரண்பாடுகள் மற்றும் கருத்துவேற்றுயைக் களைவதில் சீனா புதிய  மாதிரியை உருவாக்கியுள்ளது என்றும் அவர்கள் கூறினர்.

ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, அரபு, ரஷியா ஆகிய மொழிகளில் வெளியிப்பட்ட கருத்துக் கணிப்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.