அணு ஆயுத பரவல் தடுப்பு பற்றிய சீனாவின் வேண்டுகோள்
2024-07-24 10:40:36

அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்துக்கான 11வது பரிசீலனை மாநாட்டின் 2வது ஆயத்தக் கூட்டம் ஜூலை 23ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடத்தப்பட்ட பொது விவாதத்தில் சீனப் பிரதிநிதி உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், நெடுநோக்கு இடர்பாடுகளைக் குறைக்கும் விதம், அணு ஆயுதங்களைக் கொண்ட 5 நாடுகள், “முதலில் ஒன்றின் மீது ஒன்று அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது”என்ற ஒப்பந்தத்தை எட்ட வேண்டும், அல்லது தொடர்புடைய அரசியல் அறிக்கையை வெளியிட வேண்டும் என சீனா முன்வைக்கிறது என்றார்.

மேலும், வெளிநாடுகளில் அமைக்கப்பட்ட அணு ஆயுதங்களை அமெரிக்கா விலக்கிக்கொண்டு, உலகளவில் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை பரவல் செய்வதைக் கைவிட வேண்டும் என்றும் சீனா வேண்டுகோள் விடுத்தது.