சீன ஸ்கேட்போர்டிங் பிரதிநிதிக் குழுவின் மிக இளைய வீரர்
2024-07-25 10:14:49

இவ்வாண்டு துவக்கப் பள்ளியிலிருந்து பட்டம் பெற்ற ட்செங் ஹௌஹௌ என்பவர், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் முதன்முறையாக கலந்து கொள்ளவுள்ளார்.

கடந்த ஜுன் திங்கள் புடாபெஸ்ட் நகரில் நடத்தப்பட்ட 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டித் தகுதிக்கான போட்டியில், அவர் வெற்றிப் பெற்று, சீன ஸ்கேட்போர்டிங் பிரதிநிதிக் குழுவின் மிக இளைய வீரராகத் திகழ்கின்றார். தன்னுடைய 7 ஆவது வயதிலேயே ஸ்கேட்போர்டிங் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கிய ஹௌஹௌக்கு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கனவு இருந்தது. அது இப்போது நனவாகியுள்ளது.