© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன ஊடகக் குழுமத்தின் ஏற்பாட்டில் புதிய யுகத்தில் சீனாவின் ஆழமான சீர்திருத்தத்தால் உலகிற்குக் கிடைக்கும் வாய்ப்பு என்ற கலந்தாய்வு கூட்டத்தின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிறப்பு கூட்டம் ஜூலை 23ஆம் நாள் அந்த நாட்டுத் தலைநகரான அபுதாபியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹை சியோங் காணொளி மூலம் உரை நிகழ்த்தினார்.
தன்னுடைய உரையில் புதிய காலத்தில் சீர்திருத்தத்தைச் சீனா பன்முகங்களிலும் ஆழமாக்குவது, சீனப் பாணி நவீனமயமாக்கத்துடன் தேசிய மறுமலர்ச்சியையும் வல்லரசு கட்டுமானத்தையும் பன்முகங்களிலும் முன்னேற்றும் முக்கிய நடவடிக்கையாகும் எனக் குறிப்பிட்ட அவர், இப்போக்கு உலகிலுள்ள பல்வேறு நாடுகளின் வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்புகளை வழங்குவதோடு உயிராற்றலையும் ஊட்டும் என உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும், புதிய யுகத்தில் சீனா சீர்திருத்தத்தை ஆழப்படுத்துவதில் உலக வாய்ப்புகளைக் கூட்டாக ஆராய்ந்து பகிர்ந்து கொள்ள சீன ஊடகக் குழுமம் எப்போதும் பாடுபட்டு வருவதாகவும், அமைதி வளர்ச்சி, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பு, கூட்டுச் செழுமை ஆகியவற்றைக் கொண்ட உலக நவீனமயமாக்கத்தை நனவாக்க பங்காற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.