© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன ஊடகக் குழுமம் நடத்திய புதிய யுகத்தில் ஆழமான சீனச் சீர்திருத்தத்தால் உலகிற்குக் கிடைக்கும் வாய்ப்புகள் எனும் உலகக் கலந்துரையாடல் கூட்டம் ஜூலை 22ஆம் நாள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது.
இதில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென்ஹை சியொங் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், உலகின் கவனத்தை ஈர்த்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வு பெய்ஜிங்கில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இது புதிய யுகத்தில் சீனாவின் ஒரு மைல் கல்லாகும். சீனச் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கதைகள், சீனப் பாணி நவீனமயமாக்கலின் கதைகள் ஆகியவற்றை நன்கு விளக்கிக் கூறுவதில் சீன ஊடகக் குழுமம் முயற்சியுடன் பாடுபட்டு வருகிறது. மேலும், சீனா உலகத்துடன் பரிமாற்றம் மற்றும் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு, ஒன்றிடமிருந்து ஒன்று கற்றுக்கொள்வதற்கான பாலத்தைக் கட்டியமைப்பதிலும் சீன ஊடகக் குழுமம் ஆக்கப்பூர்வமாகப் பாடுபட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.