ஒலிம்பிக் விளையாட்டு போட்டியுடன் ஆழ்ந்த உணர்ச்சி பிணைப்பைக் கொண்டுள்ள ஷிச்சின்பிங்
2024-07-25 15:00:43

2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி உள்ளூர் நேரப்படி ஜூலை 26ஆம் நாள் துவங்கவுள்ளது.

இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் எலிசே அரண்மனையில் பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய ஷிச்சின்பிங், பிரான்ஸ் விளையாட்டு வல்லரசாகும் எனக் குறிப்பிட்டதோடு. பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடக்க வாழ்த்தும் தெரிவித்தார். மேலும், சீனா அனுப்பவுள்ள உயர் நிலை பிரதிநிதிக் குழு பிரான்ஸுக்குச் சென்று இப்போட்டியில் கலந்து கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2008ஆம் ஆண்டில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் பாராலிம்பிக்  விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணியின் தலைமைக் குழுவின் தலைவராக பதவி ஏற்றத்திலிருந்து 2022ஆம் ஆண்டில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் குளிர்கால பாராலிம்பிக்  விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதை முன்னேற்றியதிற்கு வரை, ஷிச்சின்பிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியுடன் ஆழ்ந்த உணர்ச்சி சார்ந்த பிணைப்பைக் கொண்டுள்ளார்.