சீன மற்றும் ரஷிய வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு
2024-07-26 10:35:04

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ வியண்டியனில் ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவைச் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின் போது வாங் யீ கூறுகையில், சீன-ரஷிய ஒன்றுக்கு ஒன்று அரசியல் நம்பிக்கை உறுதியாக இருக்கின்றது. நெடுநோக்கு ஒத்துழைப்பும் இடைவிடாமல் ஆழமாகி வருகின்றது. ரஷியாவுடன் இணைந்து, அண்டை நாடுகளின் நட்புறவை நிலைநிறுத்தி, ஒன்றையொன்று ஆதரித்து, அந்தந்த நாட்டின் மையமான நலன்களைப் பேணிக்காத்து, கூட்டு வளர்ச்சியுடன் எப்போதும் நல்ல கூட்டாளியாகத் திகழச் சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.

சீனாவும் ரஷியாவும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் முக்கிய நாடுகளாகத் திகழ்வதோடு ஆசியான் நாடுகளின் கூட்டாளி பேச்சுவார்த்தை நாடுகளாகவும் விளங்குகின்றன. மேலும், கிழக்காசிய ஒத்துழைப்பு குறித்த பரிமாற்றத்தையும் ஒருங்கிணைப்பையும் நிலைநிறுத்த வேண்டும். இந்நிலையில் ரஷியாவுடன் இணைந்து ஆசியானை மையமாகக் கொண்ட திறந்த மற்றும் உள்ளடக்கிய பிராந்திய ஒத்துழைப்பு கட்டமைப்பைக் கூட்டாகப் பேணிக்காத்து, தற்போதுள்ள கிழக்கு ஆசிய வழிமுறைகள் ஒத்துழைப்பு பற்றிய ஒத்த கருத்துக்களை ஆழமாக்கி, பிராந்திய அமைதி, நிதானம் மற்றும் செழுமையை மேம்படுத்தச் சீனா விரும்புவதாக வாங் யீ தெரிவித்தார்.