சீன-இந்திய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
2024-07-26 11:13:41

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, ஜுலை 25ம் நாள் வியண்டியன் நகரில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கரைச் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின் போது வாங் யீ கூறுகையில், சிக்கலான சர்வதேச நிலைமை மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொண்டுவரும் அண்டை நாடுகளான சீனாவும், இந்தியாவும், பெரிய வளரும் நாடுகளாகவும், புதிய வளர்ச்சி வாய்ப்பைக் கண்டுள்ள நாடுகளாகவும் திகழ்கின்றன. இவ்விரு நாடுகள், பேச்சுவார்த்தை மற்றும் தொடர்பை வலுப்படுத்தி, புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை அதிகரித்து, முரண்பாடுகள் மற்றும் சர்ச்சைகளை உரிய முறையில் சமாளித்து, ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்பை முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

தவிரவும், இரு தரப்புறவை மேம்படுத்துவதில், சீன-இந்திய வல்லரசுகளின் நெடுநோக்கு பார்வையை வெளிக்காட்ட வேண்டும் என விருப்பம் தெரிவித்த வாங்யீ, இரு தரப்பின் சர்ச்சை சமாளிப்பில் இவ்விரு பண்டைய நாகரிகங்களின் அரசியல் ஞானத்தை வெளிக்காட்ட வேண்டும் எனக் கூறினார். மேலும், உலகளாவிய சவால்களைச் சமாளிப்பதில், உலகின் வளரும் நாடுகளின் ஒற்றுமையை வெளிக்காட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.