அமெரிக்க நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் குழு சீனாவில் பயணம்
2024-07-26 10:42:32

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வு நிறைவடைந்ததையடுத்து, ஃபெடெக்ஸ், கோல்ட்மேன் சாக்ஸ், ஆப்பிள், போயிங், மைக்ரோன் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட அமெரிக்கத் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த உயர் நிர்வாக அதிகாரிகளின் பிரதிநிதிக் குழு சீனாவில் பயணம் மேற்கொண்டது. சீர்திருத்தத்தை மேலும் பன்முங்களிலும் ஆழமாக்குவதற்கான சீனாவின் கொள்கைகளை அறியவும் அதிலிருந்து கூட்டு வெற்றி பெறும் வாய்ப்புகளை இறுகப்பற்றுவதற்குரிய அவர்களின் விருப்பத்தையும் இப்பிரதிநிதிக் குழுவின் பயணம் வெளிக்காட்டியுள்ளது என்று ஆய்வாளர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வில் சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக்கான புதிய வளர்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுத் திறப்பை மேலும் விரிவாக்குவதன் மனவுறுதி உலகத்துக்குக் காட்டப்பட்டுள்ளது. சந்தை, ஒத்துழைப்பு ஆகிய இவ்விரு முக்கியச் சொற்களிலிருந்து, திறப்புக்கான திறனை சீனா விரிவாக்குவதன் அடிப்படையும் வழிமுறையும் கண்டு கொள்ளலாம். அதோடு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் திறவுகோலும் இதுவாகும்.

சீனா என்னும் பெரிய சந்தை உலகிற்குப் பெரிய வளர்ச்சி வாய்ப்பாகும். சீனாவின் வளர்ச்சிக்கு உயர் நிலையான உறுதித் தன்மை, தொடர்ச்சித் தன்மை மற்றும் தொடரவல்ல தன்மை உண்டு. எனவே, உலகத்துக்கு நிலையான எதிர்பார்ப்பாகவும் இது விளங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.