ஈரான் அரசுத் தலைவரின் பதவியேற்பு விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதர் பங்கெடுப்பு
2024-07-26 15:52:58

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அழைப்பின் பேரில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும் சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவருமான பெங் சிங் ஹுவா ஜூலை 30ஆம் நாள் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறவுள்ள ஈரான் அரசுத் தலைவர் மசூத் பெசெஸ்கியனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாகச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவோ நிங் அம்மையார் தெரிவித்தார்.