சீன-ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
2024-07-27 17:02:36

சீன-ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஜூலை 26ஆம் நாள் லாவோஸின் வியண்டியன் நகரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, சீன-ஆசியான் உறவுக்கான ஒருங்கிணைப்பு நாட்டின் பிரதிநிதி ஆகியோர், இக்கூட்டத்துக்குக் கூட்டாகத் தலைமைத் தாங்கினர்.

அப்போது வாங்யீ கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, சீன-ஆசியான் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானம் செழுமையான சாதனைகளைப் பெற்று, இரு தரப்புகளின் பொது மக்களுக்கு நன்மை புரிந்து, கூட்டு வளர்ச்சியைப் பெரிதும் முன்னேற்றியுள்ளது. சீன நவீனமயமாக்கம், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியில் மேலும் பெரும் வளர்ச்சியைத் தூண்டி, உலகத்தின் பல்வேறு நாடுகள் குறிப்பாக ஆசியான் நாடுகளுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் என்றார்.

மேலும், ஆசியான் நாடுகளின் நெடுநோக்கு சுய நிர்ணயத்துக்கு சீனா தொடர்ந்து உறுதியுடன் ஆதரவு அளித்து, ஆசியான் நாடுகளை மையமாக கொண்ட பிரதேச ஒத்துழைப்பு அமைப்புமுறையை வலுப்படுத்தி, மேலும் நெருங்கிய சீன-ஆசியான் பொது எதிர்காலச் சமூகத்துக்குப் புதிய இயக்காற்றலை ஊட்ட சீனா விரும்புவதாக தெரிவித்தார்.

தவிரவும், தென் சீனக் கடல் விவகாரம் பற்றிய சீனாவின் நிலைப்பாட்டையும் வாங்யீ எடுத்துக்கூறினார்.