உலக மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பெய்ஜிங்கின் மத்திய அச்சு
2024-07-27 19:59:29


ஜூலை 27ஆம் நாள் இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்ற யுனேஸ்கோவின் 46ஆவது உலக மரபுச் செல்வ மாநாட்டில் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, “பெய்ஜிங்கின் மத்திய அச்சு: சீனத் தலைநகரின் தலைசிறந்த ஒழுங்கிற்கான மாபெரும் கட்டுமானப் படைப்பு” என்பது உலக மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இது வரை இப்பட்டியலில் சேர்க்கப்பட்ட சீனாவின் மரபுச் செல்வங்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆகும்.

பெய்ஜிங்கின் மத்திய அச்சு, பெய்ஜிங்கின் பழைய நகரின் தெற்கிலிருந்து வடக்கிற்கு செல்கிறது. இது, கி.பி. 13ஆவது நூற்றாண்டில் கட்டியமைக்கத் துவங்கியது. கி.பி. 16ஆவது நூற்றாண்டில் இது உருவாகியது. வளர்ச்சி மூலம் தற்போது இதன் மொத்த நீளம் 7.8 கிலோமீட்டர் ஆகும். இது உலகில் மிக நீளமான நகர அச்சு ஆகும். சீனாவின் பண்டைக்காலத்தில் நகர வடிவமைப்பு பாரம்பரியத்தையும், பெய்ஜிங் நகரின் வளர்ச்சிப் போக்கினையும் இது வெளிப்படுத்தி, சீனத் தேச நாகரிகத்தின் தனிச்சிறப்புக்கான முக்கிய சின்னமாக விளங்குகிறது.

பெய்ஜிங்கின் பண்டைய நகரின் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு மற்றும் பரவலில் சீன அரசு மேற்கொண்டுள்ள மாபெரும் முயற்சிகளையும், பெற்றுள்ள தலைசிறந்த சாதனைகளையும் யுனேஸ்கோ அமைப்பு வெகுவாக பாராட்டியுள்ளது.