10+3 நாடுகளின் ஒத்துழைப்பு பற்றிய சீனாவின் முன்மொழிவுகள்
2024-07-27 19:55:42

ஜூலை 27ஆம் நாள் வியண்டியன் நகரில் நடைபெற்ற ஆசியான் நாடுகள், சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின்(10+3) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ கலந்து கொண்டார்.

வாங்யீ கூறுகையில், கடந்த ஆண்டில், 10+3 ஒத்துழைப்பு திட்டப்படி சீராக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதேசப் பொருளாதார ஒருமைப்பாட்டுப் போக்கு தொடர்ச்சியாக முன்னேற்றப்பட்டு வருகிறது. நிதி மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்புடைய ஒத்துழைப்புகள் ஆழமாகி, புதிதாக வளரும் துறைகளின் ஒத்துழைப்புகள் விரிவாகி வருகின்றன. பல்வேறு தரப்புகளுடன் ஒற்றுமையுடன் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, பிரதேசப் பொருளாதார ஒருமைப்பாட்டுப் போக்கை உறுதியுடன் முன்னேற்றி, கிழக்காசிய பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கம் என்ற இலக்கை நோக்கி முன்னேற சீனா விரும்புகிறது என்றார்.

மேலும், அடுத்த கட்ட ஒத்துழைப்பு குறித்து சீனா 4 முன்மொழிவுகளை முன்வைத்தது. முதலாவதாக, பொருளாதார ஒருமைப்பாட்டுப் போக்கை ஆழமாக முன்னேற்றி, பிரதேச தொடர்பைத் தூண்ட வேண்டும். இரண்டாவதாக, நெருக்கடிகளைச் சமாளிக்கும் ஆற்றலை வலுப்படுத்தி, பிரதேச நிலைத்தன்மையைப் பேணிக்காக்க வேண்டும். மூன்றாவதாக, புதிதாக வளரும் துறைகளின் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தி, பிரதேச வளர்ச்சிக்கு வழிக்காட்ட வேண்டும். நான்காவதாக, சமூகம் மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தை முன்னேற்றி, பிரதேசத்தின் ஒத்த கருத்துகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.