இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு உயர்வு
2024-07-27 16:40:17

இலங்கைக்கு ஜூலை மாதம் 15ம் தேதி வரையில் சுமார் 1.1 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், தொடர்ந்து  நீடிக்கும் நிலையில் நடப்பு ஆண்டில் இறுதியில் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் புதிய உயர் பதிவை எட்டும் என்று  அந்நாட்டு அரசு தலைவரின் ஊடகப் பிரிவு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலா மற்றும் நிலம் அமைச்சகத்தின் செயலாளர் சோமரத்ன விதனாபத்திரனா, 2018 ஆம் ஆண்டில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் மூலம் 4.4 பில்லியன் அமெரிக்க டாலர்  வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகார சபையின் துணை இயக்குநர் உபாலி ரத்னாயக்க, 2024 ஜனவரி முதல் ஜூன் இறுதி வரை சுற்றுலா மூலம் சுமார் 1.56 பில்லியன் டாலர் வருவாய் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தேசிய மிருகக்காட்சிசாலையின் துணை இயக்குனர் எச்.ஜி.ஜயசேகர கூறுகையில், நாட்டின் தாவரவியல் பூங்கா 2024 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் வரை 965,468 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளையும் 183,674 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் வரவேற்றுள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 96 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.