ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்களின் கூட்டம் நிறைவு
2024-07-27 17:05:49

2 நாட்கள் நீடித்த ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்களின் கூட்டம் ஜூலை 26ஆம் நாள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நிறைவுப் பெற்றது. சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்த அளவை அதிகரித்து, பலதரப்பு வளர்ச்சி வங்கி அமைப்புமுறையின் கட்டுமானத்தை வலுப்படுத்தி, மேலும் நேர்மையான மற்றும் நிதானமான சர்வதேச வரி வருமான அமைப்புமுறையை உருவாக்க வேண்டும் என்று இக்கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

உலகப் பொருளாதாரத்தின் மிக முக்கிய பகுதியின் மீதான ஜி20 நாடுகளின் புரிந்துணர்வை, இக்கூட்டறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் வெளிப்படையான, நேர்மையான மற்றும் நியாயமான வரி வருமான அமைப்புமுறையை உருவாக்கி, மேலும் சமத்துவமான சமூகத்தின் நனவாக்கத்துக்குப் பங்காற்றுவது, அதன் நோக்கமாகும் என்று இக்கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், பிரேசிலின் நிதி அமைச்சருமான பெர்னாண்டோ ஹடாட் தெரிவித்தார்.