பெய்ஜிங்கின் மத்திய அச்சு, உலக மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான கொண்டாட்டம்
2024-07-28 19:27:24

ஜூலை 27ஆம் நாள் இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்ற யுனேஸ்கோவின் 46ஆவது உலக மரபுச் செல்வ மாநாட்டில், பெய்ஜிங்கின் மத்திய அச்சு, உலக மரபுச் செல்வப் பட்டியலில் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டது. இதைக் கொண்டாடும் விதம், பெய்ஜிங்கில் பல்வேறு துறையினர்கள் பல நிகழ்ச்சிகளை நடத்தி, மத்திய அச்சுக்கான பாதுகாப்பு மற்றும் பரவலில் கூட்டாகப் பங்கெடுக்கும் விருப்பத்தைத் தெரிவித்தனர்.

7.8 கிலோமீட்டர் நீளமுடைய பெய்ஜிங் மத்திய அச்சு பகுதியில், 13ஆவது நூற்றாண்டு முதல் இதுவரை சீன வரலாற்றில் மிக முக்கியமான கட்டிடங்கள் அமைந்துள்ளன. இதுவும் உலகில் மிக நீளமான நகர அச்சு ஆகும்.

இசை கருவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமெரிக்க மாணவி அன்னமேரி லாங்கேக்கர் கூறுகையில், பெய்ஜிங் மத்திய அச்சு பகுதியிலுள்ள பல இடங்களுக்குச் சென்றேன். இத்தகைய இடம் செவ்வனே பாதுகாக்கப்படத்தக்கது. சீனப் பண்பாடுகளை முழு உலகமும் அறிந்து கொள்வது, அர்த்தமுள்ள விஷயமாகும் என்றார்.