பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு முறையில் சேர மலேசியா விண்ணப்பம்
2024-07-28 19:37:56

பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு முறையில் சேர்வதற்கான விண்ணப்பத்தை பிரிக்ஸ் நாடுகளின் நடப்பு தலைவர் பதவி வகிக்கும் நாடான ரஷியாவுக்கு மலேசியா அளித்துள்ளது என்று மலேசிய தலைமையமைச்சர் மாளிகை ஜூலை 28ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் முதன்முறையாக சந்திப்பு நடத்தி, பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்புக்கான புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்தனர். 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது 15ஆவது சந்திப்பு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னேஸ்பெர்க்கில் நடைபெற்ற போது, பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர்களை விரிவாக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள், செளதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், எத்தியோப்பியா ஆகிய நாடுகள் பிரிக்ஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக மாறின.