© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
வனுவாட்டு தலைமையமைச்சர் சார்லட் சல்வாய் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், சீனா பெற்றுள்ள சாதனைகள், குறிப்பாக அடிப்படை வசதிக் கட்டுமானம் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறைகளில் பெற்றுள்ள சாதனைகள் எனக்கு வியப்பு அளித்துள்ளது. உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மூலம், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது, ஒரு சவாலாகும். இந்நிலையில், வனுவாட்டு, சீனாவிலிருந்து தொடர்புடைய அனுபவங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
சீனா முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் கலந்து கொண்ட முதலாவது தொகுதியான நாடுகளில் ஒன்றாக, வனுவாட்டு திகழ்கிறது. இந்தக் கட்டுகோப்பின் கீழ், இரு நாடுகள் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, வனுவாட்டுத் தேசிய விளையாட்டு அரங்கம் மற்றும் பள்ளிகளைக் கட்டியமைத்தன. இது குறித்து அவர் கூறுகையில், எங்களது சிறிய தீவு நாடுகளில், மூலவளங்கள் குறைவு. ஆனால், சீனாவுடனான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளின் மூலம், இத்தகைய அடிப்படை வசதிகள் கட்டியமைக்கப்பட்டன என்று தெரிவித்தார்.