© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஜூலை 27ஆம் நாள் வியண்டியன் நகரில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனைச் சந்தித்தார். தற்போதைய சீன-அமெரிக்க உறவு குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அதோடு, பல்வேறு நிலைகளிலான தொடர்பைத் தொடர்ந்து நிலைநிறுத்தி, சென் பிரான்சிஸ்கோவில் இரு நாட்டு அரசுத் தலைவர்களின் சந்திப்பில் எட்டப்பட்ட முக்கிய ஒத்த கருத்தை மேலும் செவ்வேன செயல்படுத்துவதை ஒப்புக்கொண்டனர்.
வாங் யீ கூறுகையில், கடந்த மூன்று மாதங்களில், தூதாண்மை, நிதி, சட்ட அமலாக்கம், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது முதலிய துறைகளில் இரு தரப்பும் தொடர்பு மேற்கொண்டன. இரு நாட்டு அரசு சாரா பரிமாற்றமும் அதிகரித்தது. அதே வேளையில் இரு நாட்டுறவு எதிர்நோக்கும் அபாயம் மற்றும் சவால் அதிகரித்து வருகின்றன. இரு தரப்பும் அபாயத்தைக் கட்டுப்படுத்தி, கருத்து வேற்றுமையை உரிய முறையில் கையாள வேண்டும் என்று தெரிவித்தார். இரு தரப்புகளின் கூட்டு முயற்சிகளுடன், இரு நாட்டுறவின் நிதானமான சீரான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியைத் தூண்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிளிங்கன் கூறுகையில், அமெரிக்க-சீன உறவின் நிதானத்தை நிலைநிறுத்த அமெரிக்கா ஆக்கமுடன் பாடுபட்டு, ஒரே சீனா என்ற கொள்கையில் ஊன்றி நிற்பதாகவும், சீனாவுடன் இணைந்து தொடர்பை நிலைநிறுத்தி, போதைப் பொருள் தடுப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து ஒத்துழைப்பு மேற்கொள்வதை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.