லெபனான்-இஸ்ரேல் எல்லைப் பகுதியில் தொடர்ச்சியான மோதல் குறித்து ஐ.நா வேண்டுகோள்
2024-07-29 10:46:08

27ஆம் நாள் இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட கோலன் ஹைட்ஸ் மீதான ராக்கெட் தாக்குதல் குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரேஸ் 28ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் கண்டனம் தெரிவித்தார். பல்வேறு தரப்புகள் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இஸ்ரேல் மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா குழு இடையே உள்ள மோதல் தீவிரமாகுவது எந்த தரப்புக்கும் நன்மை அளிக்காது என்று அமைதி நடவடிக்கைகளுக்கான ஐ.நா துணைத் தலைமை செயலாளர் லாக்ரோயிக்ஸ் சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளரிடம் கூறினார்.

லெபனான் மற்றும் இஸ்ரேலின் பல்வேறு தரப்புகளுடன் ஐ.நா தொடர்பை நிலைநிறுத்தும் என்று லெபனானிலுள்ள ஐ.நாவின் தற்காலிக படை 28ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.  முழு பிரதேசமும் பேரழிவுக்குள்ளாவதைத் தவிர்க்க, பல்வேறு தரப்புகள் தொடர்ச்சியான துப்பாக்கிச் சண்டைகளை நிறுத்த வேண்டும் என்றும் அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.