பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்புமுறையில் சேரும் நாடுகளுக்கு சீனா வரவேற்பு
2024-07-29 17:22:03

பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்புமுறையில் சேர்வதற்கு மலேசியா விண்ணப்பம் அளித்தது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் ஜூலை 29ஆம் நாள் கூறுகையில், பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்புமுறையின் வளர்ச்சி, கால ஓட்டத்துக்கும், பல்வேறு நாடுகளின் நலன்களுக்கும் பொருந்தி, உலக பலதுருவமயமாக்கம் மற்றும் சர்வதேச உறவின் ஜனநாயகமயமாக்கத்துக்கு வலிமையான இயக்காற்றலை ஊட்டியுள்ளது. எனவே, மலேசியா உள்ளிட்ட மேலும் அதிகமான வளரும் நாடுகள் பிரிக்ஸ் அமைப்புமுறையில் சேர விரும்புகின்றன என்றார்.

மேலும், பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், பயன்தரும் முறையில் தொடர்புடைய முற்போக்கினை முன்னேற்றி வருகின்றன. ஒத்த கருத்து கொண்ட மேலும் அதிகமான நாடுகள் பிரிக்ஸ் அமைப்புமுறையில் சேர்ந்து, சர்வதேச ஒழுங்கு மேலும் நியாயமான திசையை நோக்கி வளர்வதை முன்னேற்ற விரும்புவதாக தெரிவித்தார்.