© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங் மாநகரிலுள்ள மக்கள் மகாமண்டபத்தில், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள கிழக்குத் திமோர் அரசுத் தலைவர் ஜோஸ் ராமோஸ் ஹோர்டாவுடன் ஜூலை 29ஆம் நாள் முற்பகல், சந்தித்துரையாடினார்.
இரு நாட்டுறவு வாழையடி வாழையாக நிலவி வருகின்றது. தூதாண்மை உறவு நிறுவப்பட்ட பிறகு, ஒன்றுக்கு ஒன்று நேர்மையாக பழகி, இரு தரப்பும் உதவி புரிந்து வருகின்றன. வேறுபட்ட அரசியல் அமைப்புமுறை, வளர்ச்சி நிலைமை, வரலாற்றுப் பண்பாட்டு வாய்ந்த நாடுகளுக்கிடையில் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, சமாதான சக வாழ்வு, கூட்டாக வளர்வதன் முன்மாதிரியாக இரு நாட்டுறவு நிகழ்கிறது இதுவாகும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
கிழக்குத் திமோருடன் இணைந்து, இரு தரப்புறவின் நீண்டகாலமான, நிதானமான வளர்ச்சியை வழிகாட்ட சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. முதலில், ஒன்றுக்கு ஒன்று உறுதியாக ஆதரவளித்து, மேலும் உயர் நிலை வாய்ந்த இரு தரப்புறவை உருவாக்க வேண்டும். அடுத்ததாக, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெற்று, மேலும் உயர் தரமுள்ள பயனுள்ள ஒத்துழைப்புகளை வளர்க்க வேண்டும். மூன்றாவதாக, தெற்கு உலகின் இலட்சியத்தைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும். மேலும் உயர் நிலை பல தரப்பு ஒத்துழைப்புகளை மேற்கொள்ள வேண்டும். பஞ்ச சீல கோட்பாடுகளைப் பின்பற்றி, ஐ.நா, உலக வர்த்தக அமைப்பு போன்ற பல தரப்பு மேடைகளிலுள்ள ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.