2024ம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என இலங்கை நம்பிக்கை
2024-07-29 17:25:36

இலங்கையில் உள்ள தேசிய பூங்கா உள்ளிட்ட இயற்கை சுற்றுலா பகுதிகளுக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  வன பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி,  2022 ஆம் ஆண்டில்  289,405 சுற்றுலாப் பயணிகளும், 2023 ஆம் ஆண்டில் 444,053 சுற்றுலாப் பயணிகளும் வருகை புரிந்துள்ளதாக தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள தேசிய பூங்காக்களுக்கு நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 364,521 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை  40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்ந்து வெளிநாட்டு பயணிகள் வருகையின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் வன்னியாராச்சி கூறினார்.

யால, உடவலவை, ஹோட்டன் சமவெளி, கவுதுளா, மின்னேரியா மற்றும் வில்பட்டு உள்ளிட்ட தேசிய பூங்காக்களில் பயணிகள் வசதிக்காக ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறை உள்ளதாக தெரிவித்தார்.