பட்டுப்பாதை எழுச்சிக்கு முக்கியத்துவம் அளித்த சீனாவும் இத்தாலியும்
2024-07-30 19:54:55

இவ்வாண்டு, சீன-இத்தாலி பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவு உருவாக்கப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவாகும். இத்தாலி தலைமையமைச்சர் ஜார்ஜியா மெலோனி அம்மையார் சீனாவில் முதல் பயணம் மேற்கொண்டார். சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜூலை 29ஆம் நாள் அவரைச் சந்தித்த போது கூறுகையில், அமைதி மற்றும் ஒத்துழைப்பு, திறப்பு மற்றும் இணக்கம், ஒன்றுடன் ஒன்று பகிர்வு, பரஸ்பர நலன் தந்து கூட்டு வெற்றி பெறுதல் ஆகியவற்றைக் கொண்ட “பட்டுப்பாதை எழுச்சி”, இரு நாடுகளின் கூட்டுச் செல்வமாகும் என்று வலியுறுத்தினார்.

பட்டுப்பாதை எழுச்சி, சீன-இத்தாலி மக்களுக்கிடையிலான பொது நினைவு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றப் பாலமாகும். அது மட்டுமல்லாமல், அமைதி, திறப்பு, ஒத்துழைப்பு ஆகிய கருத்துகளைக் கொண்ட பட்டுப்பாதை எழுச்சி, வளர்ச்சிப் போக்கிற்குப் பொருந்தி, கால மதிப்பைக் கொண்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, உலக புவியமைவு அரசியல் கட்டமைப்பு ஆழமாக மாறியுள்ளது. உலகப் பொருளாதார மீட்சி தாழ்ந்த நிலையில் உள்ளது. முக்கிய நாடான சீனா, உலகச் சவால்களைச் சமாளிப்பதில் ஈடிணையற்ற பங்காற்றி வருகிறது. சீனாவுடனான ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது, இத்தாலி பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது. பட்டுப்பாதை எழுச்சியைப் பரவல் செய்து செயல்படுத்துவது, இரு தரப்புகளின் பொது நலன்களுக்குப் பொருந்தியது.

தொழிற்துறை, கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதலிய துறைகளில் ஒத்துழைப்பு ஆவணங்களில் கையொப்பமிடுவது, பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை வலுப்படுத்துவதற்கான 3 ஆண்டுத் திட்டத்தை வெளியிடுவது முதலிய சாதனைகள், சீன-இத்தாலி உறவின் வளர்ச்சிக்குப் புதிய இயக்காற்றலை ஊட்டி, சீன-ஐரோப்பிய பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கும் துணைப் புரியும். சீன-இத்தாலி ஒத்துழைப்பு மேலும் ஆழமாகி, ஐரோப்பாவுக்கு மட்டுமல்லாமல், முழு உலகத்துக்கும் நன்மை புரியும்.