சீனாவின் சிசாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் வளர்ச்சி
2024-07-30 11:24:51

சோமூ என்பவர், சீனாவின் சிசாங் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஆவார். அவருடைய தந்தை, சிசாங்கின் லீன்ச்சீ நகரில், கனோதெர்மா என்ற மூலிகையைப் பயிரிடும் பண்ணை ஒன்றை நிறுவினார். 2018ஆம் ஆண்டு சோமூ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, சம்பளம் அதிகம் தரும் வேலை வாய்ப்பை கைவிட்டு, தந்தையின் பண்ணைக்குத் திரும்பி, கனோதெர்மா என்ற மூலிகையின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றார்.

சோமூவின் அனுபவம், கடந்த சில ஆண்டுகளில் சிட்சாங் இளைஞர்கள் வாழ்க்கையின் மாதிரியாக திகழ்கின்றது.

முன்னதாக, நாடளவில் வறுமை விகிதம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான செலவு அதிகமாகவும், வறுப்பு ஒழிப்புப் பணிக் கடினமாகவும் உள்ள பகுதியாக சிசாங் இருந்தது」. கடந்த சில ஆண்டுகளில், சீன நடுவண் அரசின் உதவியோடு, தனிச்சிறப்புடைய பண்பாட்டு சுற்றுலா தொழில் அமைப்பு முறை, வேளாண்மை அறிவியல் தொழில் நுட்ப பூங்கா, அதிக மதிப்பு உருவாக்கும் உற்பத்தித் தளம் ஆகியவை இந்த பகுதியில் அமைக்கப்பட்டன.

அதேவேளையில் சிசாங் தன்னாட்சிப் பிரதேச அரசின் உதவி வலிமைமிக்கது. சிசாங்கின் பண்பாட்டு பாதுகாப்பு நடவடிக்கை, இளைஞர்களுக்கு நம்பிக்கை தந்துள்ளது. மக்களின் மகிழ்ச்சி என்பது மிக முக்கியமான மனித உரிமையாகும். புத்தாக்கம் செய்வது, தொழில் தொடங்குவது ஆகியவற்றின் நல்ல தேர்வு, சிசாங் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.