© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இலங்கையின் கொழும்பு துறைமுகம் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 23.6 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைமுகமாக உள்ளது என கப்பல் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தகவல் தளமான அல்பா லைனர் நிறுவனம் தெரிவித்துள்ளதாக கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர திங்களன்று தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் காலாண்டில் இலங்கை துறைமுக ஆணையம் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு காலத்துடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டின் விமான சேவைகள் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக ருவன்சந்திர தெரிவித்தார்.
மேலும் கூடுதல் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களின் வசதிகளை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.