அரபு லீக்கிற்கும் சீன ஊடக குழுமத்துக்கும் இடையேயான ஒத்துழைப்பு
2024-07-30 19:31:06

அரபு லீக்கின் தலைமைச் செயலாளர் கெய்த் ஜூலை 30ஆம் நாள் எகிப்தின் கைரோவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரைத் துறை துணை தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியுங்கைச் சந்தித்தார். பண்பாடு, விளையாட்டு, ஊடக ஒத்துழைப்பு, மக்களின் பரிமாற்றம் முதலியவை குறித்து இரு தரப்பினரும் ஆழமாக தொடர்பு கொண்டு, ஒத்துழைப்பு குறிப்பாணையில் கையொப்பமிட்டனர்.

அரபு நாடுகள் மற்றும் அரபு லீக்குடன் சீனா மேற்கொண்டுள்ள பரந்துபட்ட ஒத்துழைப்பை கெய்த் வெகுவாக பாராட்டியதோடு, சீர்திருத்தத்தை சீனா மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்கும் சாதனைகள், உலகின் வளர்ச்சிக்கு புதிய இயக்காற்றலை ஊட்டும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், அரபு லீக் சீன ஊடக குழுமத்துடன் நீண்டகாலமாகவும் நெருக்கமாகவும் ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகிறது. சி.ஜி.டி.எனின் ஆங்கிலம் மற்றும் அரபு மொழி ஒளிபரப்பு, புறநிலையாகவும் நியாயமாகவும் தகவல் வெளியிட்டு, உலகில் மிக சிறந்த தொலைக்காட்சி ஒளிபரப்பாகும். எதிர்காலத்தில் சீன ஊடகக் குழுமத்துடன் ஒத்துழைப்பை ஆழமாக்குவதை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

ஷென் ஹாய்சியுங் கூறுகையில், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்களின் நெடுநோக்கு வழிகாட்டலுடன், தற்போது சீன-அரபு நாடுகளின் உறவு, வரலாற்றில் சிறப்பு மிக்க காலத்தில் உள்ளது. அரபு லீக்குடன் இணைந்து, சர்வதேச செய்திகளைக் கூட்டாக தயாரித்தல், முன்னேறிய தொழில் நுட்பங்களின் புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி, நிகழ்வுகளை கூட்டாக நடத்துதல், மக்களின் பயணப் பரிமாற்றம் முதலியத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை சீன ஊடகக் குழுமம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.