© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியேயும், அவரின் காவலர் ஒருவரும் ஈரானின் தலைநகர் தெஹரானில் தாக்குதலுக்குள்ளாகிக் கொல்லப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை ஜூலை 31ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இக்கொலைக்கான காரணம் பற்றி விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் விசாரணைக்குப் பின், முடிவு வெளியிடப்படும் என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இஸ்மாயில் ஹனியே தெஹரானில் ஈரான் புதிய அரசுத் தலைவரின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டதையடுத்து, இஸ்ரேலின் தாக்குதலுக்குள்ளாகிக் கொல்லப்பட்டார் என்று ஹமாஸ் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.