நைரோபியில் புதிய யுகத்தில் ஆழமான சீனத் சீர்திருத்தத்தால் உலகிற்கு கிடைக்கும் வாய்ப்புகள் எனும் பேச்சுவார்த்தை நிகழ்வு
2024-07-31 09:57:45

 

சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த புதிய யுகத்தில் ஆழமான சீனத் சீர்திருத்தத்தால் உலகிற்கு கிடைக்கும் வாய்ப்புகள் எனும் பேச்சுவார்த்தை நிகழ்வு ஜூலை 29ஆம் நாள் கென்யாவின் தலைநகர் நைரோபியில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரை துறைத் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென்ஹாய்சியோங் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், புதிய யுகத்தில் பன்முகங்களிலும் ஆழமான சீனச் சீர்திருத்தம் என்பது, சீனப் பாணி நவீனமயமாக்கம் மூலம், தேசிய மறுமலர்ச்சியைப் பன்முகங்களிலும் முன்னேற்றி வலுவான நாட்டைக் கட்டியமைப்பதற்கான முக்கிய திறவுகோல்களில் ஒன்றாகும். மனிதகுலத்தின் நவீனமயமாக்க பாதைக்கும் மேலும் சிறந்த சமூக அமைப்பு முறையைத் தேடுவதற்கும் அது புதிய உதவியளிக்கும். உலகின் பல்வேறு நாடுகளின் வளர்ச்சிக்கும் அது புதிய வாய்ப்பு மற்றும் புதிய உந்து ஆற்றலை வழங்கும் என்றார்.

சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் நிரந்த துணை தலைமை இயக்குநரும், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க பிரதேச நிகழ்ச்சிகள் மையத்தின் இயக்குநருமான அன்சியோயு இந்நிகழ்வில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வின் முக்கிய சிறப்பம்சம் மற்றும் அதன் மைல் கல் முக்கியத்துவத்தை விருந்தினர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.