சீன-இந்திய எல்லை விவகாரம் தொடர்பான 30ஆவது கூட்டம்
2024-08-01 09:49:28

சீன-இந்திய எல்லை விவகாரங்களுக்கான 30வது கலந்தாய்வு மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டம் ஜூலை 31 ஆம் நாள் புதுதில்லியில் நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல் விவகாரப் பிரிவின் தலைவர் ஹூங் லியாங், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்காசிய பிரிவின் கூட்டுச் செயலாளர் கவ்ரங்களால் தாஸ் ஆகியோர் இக்கூட்டத்திற்குக் கூட்டாகத் தலைமை தாங்கினர்.

இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் அண்மையில் சந்தித்த போது எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்துகளைச் செயல்படுத்தி, சீன-இந்திய எல்லை தொடர்பான பிரச்சினைகளில் விரிவாகக் கவனம் செலுத்தி, இரு தரப்புகளுக்கிடையிலான நியாயமான அக்கறைகளைக் கவனித்து, இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுகளை வெகுவிரைவில் உருவாக்க வேண்டும் என்று இரு தரப்பினரும் விருப்பம் தெரிவித்தனர்.